MILLETS

MILLETS

Sunday 31 August 2014

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்:
பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்
செய்முறை:
கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.
இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.

Wednesday 18 June 2014

ராகி சமையல்

ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான உணவு வகைகளில் முக்கியமானது ராகி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த தானியம் இது. கால்சியம் நிறைந்திருக்கும் இது, சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. ராகியில் களி, கூழ் என்றே சாப்பிட்டு பழகிய நமக்கு, அதில் அதிரசம் முதல் அடை வரை அட்டகாசமான ரெசிபிகளை செய்ய முடியும்.

 ராகி அதிரசம்

தேவையானவை:
 ராகி மாவு - இரண்டரை கப், உருண்டை வெல்லம் - 2 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 
உருண்டை வெல்லத்தை மெழுகு பதத்தில் பாகு காய்ச்சி ராகி மாவில் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு இளஞ்சூடாக இருக்கும் போது 2 கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு ஆறியதும் அதிரசங்களாக தட்டி எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.

ராகி லட்டு 

தேவையானவை: 
வறுத்த ராகி மாவு - ஒரு கப், சர்க்கரைத்தூள் - ஒண்ணேகால் கப், நெய் - கால் கப்புக்கும் சிறிது குறைவாக, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி - தேவையான அளவு.

செய்முறை: 
வறுத்த ராகி மாவு, சர்க்கரைத்தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரிக்கு பதிலாக வறுத்து உடைத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம். 

 ராகி கார கொழுக்கட்டை 

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன். 

செய்முறை: ராகி மாவை இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் உப்பு போட்டு, வறுத்த மாவில் சேர்த்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மாவை கிளறவும். கொழுக்கட்டைகளாக பிடித்து துணி போட்ட இட்லி தட்டில் வேக வைக்கவும். ராகி மாவை வாசனை வரும்வரை வறுக்கத் தேவையில்லை. லேசாக வறுத்தாலே போதும். இப்படி வறுப்பது மாவின் கொழ கொழப்புத்தன்மையை போக்குவதற்குத்தான்!.

 ராகி இனிப்பு கொழுக்கட்டை 

தேவையானவை: ராகி மாவு - 2 கப், வெல்லம் (அ) கருப்பட்டி - ஒரு கப், தேங்காய் - ஒரு மூடி, பயத்தம்பருப்பு - அரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன். 

செய்முறை: பயத்தம்பருப்பை லேசாக வறுத்து நெத்துப்பதமாக (குழைய விடாமல், தொட்டால் உடைகிற பதம்) வேக வைத்துக் கொள்ளவும். ராகிமாவை இளஞ்சூடாக வறுத்து துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்க வும். வெல்லம் (அ) கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டவும். அதை மீண்டும் கொதிக்க வைத்து மாவு கலவையில் ஊற்றி கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும். 

ராகி வெஜ் அடை 

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், மாவாக்கிய கோதுமை ரவை (அ) கோதுமை மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு (விருப்பப்பட்டால்) - கால் கப், காய்கறி கலவை - ஒரு கப் (துருவிய கேரட், வெங்காயம், கோஸ், முள்ளங்கி), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு. 

செய்முறை: எல்லா பொருட் களையும் ஒன்று சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாழை இலை (அ) பாலித்தீன் ஷீட்டில் எண்ணெய் தடவி கனமான அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும். 

 ராகி முருங்கை அடை 

தேவையானவை: ராகி மாவு - 2 கப், முருங்கை கீரை - அரை கப், பச்சரிசி மாவு - கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், உப்பு - தேவையான அளவு. தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. 

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, வெங்காயம், முருங்கை இலை சேர்த்து வதக்கவும். பத்து நிமிடம் வதங்கியதும், ராகி மாவு, அரிசி மாவில் கொட்டி இளஞ்சூடான தண்ணீரை ஊற்றிப் பிசைந்து, தோசைக் கல்லில் கனமான அடைகளாக தட்டவும்.

 ராகி புட்டு 

தேவையானவை: வறுத்த ராகி மாவு - ஒரு கப், அச்சு வெல்லம் - அரை கப், துருவிய தேங்காய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. 

செய்முறை: உப்பு கலந்த தண்ணீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து புட்டுக்கு பிசைந்து கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு சுற்றவும் (அப்போதுதான் கட்டி இருக்காது). இந்த மாவை இட்லி தட்டில் துணி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும். வெந்த மாவில் துருவிய வெல்லம் அல்லது வெல்லப்பாகு (தேன் பதத்தில்), துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும். வெல்லத்தைப் பாகாக செய்து சேர்த்தால் புட்டு தொண்டையை அடைக்காது. 

 ராகி இடியாப்பம் 

தேவையானவை: ராகி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு. 

செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும். மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டாம். வெந்த மாவை ஆற வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெந்த ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்தில் கிளறவும். சூடாக இருக்கும்போதே இடியாப்பங்களாக பிழியவும். ஒன்றின் மேல் ஒன்று பிழியாமல் பரவலாக பிழிந்தால் கொழகொழப்பு இருக்காது. வெல்லம் சேர்ந்த தேங்காய்ப் பாலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ராகி மாவுடன் அரிசி இடியாப்ப மாவை சம அளவு கலந்தும் செய்யலாம்.

ராகி சேவை 

தேவையானவை: உதிர்த்த ராகி இடியாப்பம் - 2 கப், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - அரை கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன். 

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, உதிர்த்த இடியாப்பத்தை போட்டுக் கிளறவும். கறிவேப்பிலை தூவி பரிமாறவும். 

 ராகி வற்றல் 

தேவையானவை: ராகி மாவு - 2 கப், கல் உப்பு - தேவை யான அளவு, பச்சைமிளகாய் விழுது - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்க்கவும். இந்த தண்ணீரை ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்துக்கு கிளறி, ஓமப்பொடி அச்சில் போட்டு சிறு முறுக்குகளாக பிழியவும். வெயிலில் நன்கு உலர்த்தி, டப்பாவில் பத்திரப்படுத்தவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

 ராகி பால் அல்வா 

தேவையானவை: முழு கேழ்வரகு - கால் கிலோ, நெய் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தேவையான அளவு. 

செய்முறை: கேழ்வரகை முதல்நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை கிரைண்டரில் அரைத்து 4 முறை பால் எடுக்கவும். இந்த கேழ்வரகு பாலை 4 மணி நேரம் வைத்திருந்தால் தெளிந்து விடும். மேலே நீர்த்திருக்கும் நீரை கொட்டி விடவும். கடாயில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி, ஜீரா பதத்தில் (சர்க்கரை தண்ணீரில் கரைந்ததும் ஏற் படும் பதம்) காய்ச்சவும். இதில் தெளிந்த கேழ்வரகு பால், நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த் தூள், ஜாதிக்காய்த்தூள், முந்திரி தூவி இறக்கவும்.

 ராகி மாவு அல்வா 

தேவையானவை: ராகி மாவு, வெல்லம், தேங்காய்ப் பால் - தலா 2 கப், தண்ணீர் - ஒரு கப், நெய் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - தேவையான அளவு. 

செய்முறை: தேங்காய்ப் பாலில் தண்ணீர், வெல்லம், ராகி மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். நெய் ஊற்றி அல்வா பதம் வரும் வரை கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இந்த அல்வாவில் தேங்காய்ப் பால் சேர்த்திருப்பதால் 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

ராகி ரெடிமேட் தோசை 

தேவையானவை: ராகி மாவு - 2 கப், பச்சரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீரில் கரைத்து ரவா தோசை போல் ஊற்றவும். ஊற வைக்க வேண்டியதில்லை. உடனே செய்யலாம்.

 ராகி ஸ்பான்ஜ் தோசை 

தேவையானவை: ராகி மாவு - 2 கப், உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: உளுந்தையும் வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும். இதில் ராகி மாவு, உப்பு போட்டு கரைத்து மறுநாள் கனமான தோசைகளாக வார்க்கவும்.

 ராகி சப்பாத்தி 

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், கோதுமை மாவு - கால் கப், தண்ணீர் - 1 (அ) ஒண்ணேகால் கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தளதளவென கொதிக்கும்போது எண்ணெய், ராகி மாவு சேர்த்து கட்டியில்லாமல் ஐந்து நிமிடம் கிளறவும். பிறகு கோதுமை மாவை சேர்த்து ஆறியவுடன் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் சுடவும். அடுப்பில் வைத்து கிளறாமல் சாதாரண சப்பாத்தி செய்யும் முறையிலும் எல்லாவற்-றையும் சேர்த்து, பிசைந்து செய்யலாம்.

ராகி பணியாரம் 

தேவையானவை: ராகி மாவு, ரவை, சர்க்கரை, பால் - தலா ஒரு கப், சோடா உப்பு - கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை: பாலில் ராகி மாவு, ரவை, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும் (விரும்புகிறவர்கள் துருவிய தேங்காய் சேர்க்கலாம்). பிறகு அப்பக்குழியில் நல்லெண் ணெய் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்கவும். 

சத்துமாவு உருண்டை 

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய வெல்லம் - அரை கப்புக்கும் சற்று குறைவாக, தேங்காய் - ஒரு மூடி, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை: முழு கேழ்வரகை 48 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி ஒரு மூட்டையாக கட்டி வைத்தால் மறுநாள் காலை முளைவிட்டிருக்கும். (ஊறும்போது அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்). முளைவிட்ட ராகியை வறுத்து, மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை ஒரு வாய் அகன்ற பேசினில் கொட்டி நடுவில் ஒரு குழி போட்டு, சுடுதண்ணீர், துருவிய வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி உருண்டைகளாக பிடிக்கவும்.

ராகி சுண்டல் 

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, துருவிய தேங்காய் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. 

செய்முறை: முளைவிட்ட ராகியை இட்லி தட்டில் பரப்பி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் வேக வைத்த ராகி, தேங்காய் துருவல், கறிவேப்பிலையை சேர்த்து, கிளறி இறக்கவும். தேங்காய் துருவலை தவிர்க்க நினைப்பவர்கள் வறுத்த நிலக்-கடலையை கரகரப்பாக அரைத்தும் சேர்க்கலாம்.

ராகி சாலட் 

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் - தேவைக்கேற்ப, மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை - சிறிதளவு, எலுமிச்சை சாறு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். எல்லா சத்துக்களும் நிறைந்த அற்புதமான டிஷ் இது. 

ராகி பழ அப்பம் 

தேவையானவை: ராகி மாவு, மைதா மாவு - தலா அரை கப், கனிந்த வாழைப்பழம் - 2, சர்க்கரை - தேவையான அளவு. 

செய்முறை: வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். அதனுடன் மைதா மாவு, ராகி மாவு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கையால் கரைக்கவும். அப்பக்குழியில் எண்ணெய் ஊற்றி, அப்பமாக சுடவும். குறைந்த தீயில் செய்யவும். இல்லையெனில் கருகிவிடும்

 ராகி வடை 

தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், ராகி மாவு - கால் கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து பாதி தோல் மட்டும் போகும்படி கழுவவும். கழுவிய உளுந்தை கரகரப்பாக அரைத்து அதனுடன் ராகி மாவு, உடைத்த மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை கலந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 ராகி பக்கோடா 

தேவையானவை: ராகி மாவு, மஞ்சள் சோள மாவு - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி - ஒரு அங்குல துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்-பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ராகி, சோள மாவுகளுடன் சேர்க்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சோள மாவுக்கு பதில் கடலை மாவும் சேர்க்கலாம். 

ராகி கீர் 

தேவையானவை: முழு கேழ்வரகு - அரை கப், தண்ணீர் - கால் கப், பால் - முக்கால் கப், பால் பவுடர் (அ) மில்க்மெய்ட் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவைக்கேற்ப, முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன். 

செய்முறை: முழு கேழ்வரகை வெறும் கடாயில் வறுத்து, ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். இப்போது இதில் உடைத்த ராகியைப் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பால் பவுடர், முந்திரி சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

ராகி கூழ் 

தேவையானவை: முழு கேழ்வரகு - 5 கப், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: முழு கேழ்வரகை முதல் நாள் சுத்தமாக கழுவி ஊற வைக்கவும். மறுநாள் நன்றாக அரைத்து 4 முறை பால் எடுக்கவும். எடுத்த பாலின் அளவைவிட மூன்று முதல் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி தனியே வைக்கவும். ஏழு (அ) எட்டு மணி நேரம் கழித்து மேலே தெளிந்திருக்கும் நீரை கொட்டி விடவும். அடியில் வண்டலாக படிந்திருக்கும் பாலை ஒரு துணியில் கட்டி தொங்க விடவும். அடுத்த நாள் துணியைப் பிரித்துப் பார்த்தால் ராகி விழுது படிந்திருக்கும். இதை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பவுடராக்கி வைத்துக் கொள்ளவும். கூழ் தேவைப்படும்போது, தேவையான அளவு இந்த மாவை எடுத்து உப்பு, தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி கொடுக்கவும். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பருவத்தில் இதைக் கொடுக்கலாம்.

ராகி மோர் கூழ் 

தேவையானவை: ராகி மாவு - கால் கப், கடைந்த மோர் - கால் கப், தண்ணீர் - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, துருவிய கேரட் - 3 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் - சிறிதளவு. 

செய்முறை: ராகி மாவை தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவே தனியாக வைத்து விடவும். மறுநாள் காலை அதை அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து கூழாகக் காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன் மோர், பச்சைமிளகாய், கேரட், சிறிய வெங்காயம், இஞ்சி சேர்த்து சாப்பிடவும். 

 ராகி முறுக்கு 

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், எள், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு. 

செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். மாவு சூடாக இருக்கும்போதே இதனு-டன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு பிசைந்து (ரொம்ப கடினமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல்), முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெ-யில் பொரித்துக் கொள்ளலாம். ராகி மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம்.

சத்துமாவு கஞ்சி 

தேவையானவை: முளைகட்டிய கேழ்வரகு, முளைகட்டிய பயத்தம்-பருப்பு, முளைகட்டிய கோதுமை, முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - தலா ஒரு கப், பொட்டுக்கடலை, கோதுமை ரவை தலா -ஒரு கப், புழுங்கல் அரிசி, வேர்க்கடலை, முந்திரி - தலா அரை கப், எள் - கால் கப். 

செய்முறை: எல்லா பொருட்களையும் வெயிலில் காய வைத்து தனித் தனியாக வறுக்கவும். பிறகு ஒன்றாக சேர்த்து அரைத்து தேவையான வெல்லம், பால் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடிக்கவும். இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது இனிப்பு பிடிக்காதவர்கள் வெல்லத்துக்கு பதிலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம். 

 ராகி போண்டா 

தேவையானவை: நறுக்கிய வெங்காயம் - கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. மேல் மாவுக்கு: ராகி மாவு - ஒரு கப், கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன். 

செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு இவற்றை சிறு உருண்டைகளாக செய்து, கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள மேல் மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும். 

 ராகி பிஸ்கெட் 

தேவையானவை: ராகி மாவு - ஒன்றரை கப், சர்க்கரைத்தூள் - முக்கால் கப், டால்டா (அ) நெய் - அரை கப், முந்திரி - 10, பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை. 

செய்முறை: ராகி மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று முறை சலிக்கவும். இதனுடன் டால்டா (அ) நெய், சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசையவும். நறுக்கிய முந்திரியை போட்டு பிஸ்கெட்டுகளாக தட்டவும். கடாயில் மணலை பரப்பி, பத்து நிமிடங்கள் சூடு செய்து, பிறகு ஒரு அலுமினிய தட்டில் பிஸ்கெட்டுகளை வைத்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மூடி 'பேக்' செய்யவும். 'மைக்ரோவேவ் அவன்'-ல் செய்பவர்கள் 1600 சென்டிகிரேட்டில் 20 நிமிடங்கள் 'பேக்' செய்யவும்.

Tuesday 10 June 2014

ஆளிவிதை (Flax Seed)



இதன் பூர்வீகம் மத்தியகிழக்கு நாடுகள் என்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு பரவியது என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஆளிவிதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணை சாயங்களுக்கு மேல்பூசி உலரவைக்கப்படுவதற்கும்,உயர்ரக கடதாசி, லினன் போன்ற துணிவகைகள் உருவாக்குவதற்கும பயன்படுத்தப்பட்டது. 


இந்த ஆளிவிதை பற்றி ஊரில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஆனால் இங்கு FLAX SEED என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடந்த பலவருடங்களாக இதன் தேவை அதிகரித்து விட்டது. அதற்கு காரணம் எமது உணவுப் பழக்கவழக்கமும் அதனால் வரும் நோய்களுமே. சரி இப்போது அதன் பலனையும், பலத்தையும் எப்படி பெறலாம் என்று பார்ப்போம். இது ஏறத்தாழ எள்ளுப்போன்றது ஆனால் எள்ளை விட கொஞ்சம் பெரிதாகஇருக்கும். ஆளிவிதையில் இரண்டு வகை உண்டு ஒன்று மஞ்சள் நிறத்திலும். மற்றயது மண்ணிற நிறத்திலும் காணப்படும். மஞ்சள் ஆளிவிதையை விட மண்ணிறத்தில் உள்ள ஆளிவிதையில் ஒமேகா-3 இன்அளவு கூடுதலாக காணப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊட்டச்சத்தான ஒமேகா-3 (OMEGA-3), என்ற நல்ல கொழுப்பும், அதிகூடிய நார்ச்சத்து, மேலும் வைட்டமின்- A,B, D, கல்சியம்,மக்னீஷியம், புரதம் போன்ற பல சத்துக்கள் கொண்டது. எப்படி ஒரு பெரிய வசன நடைக்கு முற்றுப்புள்ளி வைப்போமோ அதபோல் பல நோய்களுக்கு இத்தநூண்டு சைஸில் இருக்கும் இந்த தானியமும் முற்றுப்புள்ளி வைக்கும். இது நோய் வருமுன், வரும்போது, வந்தபின் காப்போர், என முக்கியமாக எல்லாவயதினர்க்கும் உதவும் அரிய தானியம். மாமிசம் உண்ணாதவர்களுக்கு இந்த ஆளிவிதை மிக உன்னதமான உணவு. அதபோல் மாமிசம் உண்பவர்கள் salman, Tuna, Halibut போன்ற மீன் வகைகளில் இருந்து பெறலாம். ஆனாலும் கூட தினமும் அவற்றை உண்ணுவது என்பது சாத்தியமில்லை. அதனால் தேநீருக்கு சுவை சேர்க்க எப்படி சீனி போடுவீர்களோ அதேபோல் இரண்டு சீனிகரண்டியுடன் (Teaspoon) ஆளிவிதை மாவை உள்ளெடுக்க ஆரம்பிக்கலாம். 




இங்கு எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உடற்பருமன், அடுத்து காலை வேளை அவசர உலகில் அடியெடுத்து வைக்கும்போது ஏற்படும்மலச்சிக்கல், சுவையான கொழுப்பு கூடிய உணவுகள் தரும் கெட்ட கொழுப்புகள், 
(சிலரிற்கு அவர்களது உடலே Bad cholesterol ஐ உருவாக்கும்), 

மார்பகப்புற்று நோய்,PROSTATE CANCER , நீரழிவு நோய், ஞாபகமறதி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், போன்றவற்றிற்கு உகந்தது. 
அன்றாட உணவில் அவரவர் வசதிக்கேற்ப எப்படி இதனை சேர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
FLAX SEED ஐ பல வடிவங்களில் வாங்கலாம், அதாவது (FLAX SEED POWDER, OIL, CAPSULES)ா, எண்ணை, மாத்திரை. தானியமாக உட்கொண்டால் அவை குடலினால்அவ்வளவாக உறிஞ்சப்படாமலே வெளியேறிவிடும். எண்ணை, மாத்திரைகளைவிட மாவாக உணவுடன் சேர்த்து உண்டால், குடலினால் பெருமளவு உறிஞ்சப்படும். 

இதற்கு சுலபமான வழி FLAX SEED ஐ கடையில் வாங்கிGRINDER இல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். FLAX SEED எந்தவிதமான சுவையும் இல்லாதது. ஆகவே தினமும் இரண்டு தேக்கரண்டிஆளிவிதைமாவை தண்ணீரில் கரைத்தோ, அல்லது தயிர் (YOGURT), JUICE,அல்லது காலையில் உண்ணும் சீரியல்களில் போட்டு உண்ணலாம். மேலும் புட்டு, தோசை, இடியப்பம், இட்டலி, இப்படியான எமது உணவுவகைகள்சமைக்கும்போது இதனையும் சேர்த்து சமைக்கலாம். அத்துடன் CAKE, MUFFIN,போன்றவற்றுடன் கலந்து ஓவன் (OVEN) இல் வைத்தும் சமைத்து சாப்பிடலாம். முக்கியமாக ஆளிமாவை உண்ணும்போது கூடவே நன்றாக தண்ணீர் குடிக்கவேண்டும். இது சமிபாட்டின் வேகத்தை கூட்டும். எந்த விடயமாக இருந்தாலும் தினமும் தொடர்ந்து செய்தால்தான் அதன் பலனை முழுமையாகஅனுபவிக்கமுடியும்.

Need flax seed:
Contact: Umanath G 9364401000

Monday 12 May 2014

அரிசி வகைகளும் அதன் குணங்களும்:




கருங்குருவை:

விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.


மாப்பிள்ளை சம்பா:

இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்


கைகுத்தல் புழுங்கல் அரிசி:

low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை


நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும்.குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.


காட்டுயானம்:

ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.


அன்னமழகி:

மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.


இலுப்பைப் பூச்சம்பா:

பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.


கல்லுண்டைச்சம்பா:

இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.


காடைச்சம்பா:

இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.


காளான் சம்பா:

உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.


கிச்சிலிச்சம்பா:

பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.


குறுஞ்சம்பா:

பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.


கைவரை சம்பா:

உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.


சீதாபோகம்:

உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.


புழுகுச்சம்பா:

இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.


மணக்கத்தை:

தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.


மணிச்சம்பா:

அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.


மல்லிகை சம்பா:

நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும்.கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.


மிளகு சம்பா:

உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.


மைச்சம்பா:

வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.


வளைத்தடிச்சம்பா:

வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.


வாலான் அரிசி:

மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.


மூங்கில் அரிசி:

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள்.மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.


பழைய அரிசி:

பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும்,கபமும் குறையும்.

Red Rice - சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு


சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.


பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

Sunday 11 May 2014

MILLETS Healthy, gluten-free, responsible eating




What are millets?

Millets are small-seeded grasses that are hardy and grow well in dry zones as rain-fed crops, under marginal conditions of soil fertility and moisture. Millets are one of the oldest foods known to humans and possibly the first cereal grain to be used for domestic purposes.
Millets are also unique due to their short growing season. They can develop from planted seeds to mature, ready to harvest plants in as little as 65 days. This is important in heavily populated areas. When properly stored, whole millets will keep for two or more years.
Why eat millets?

Nutrition:
They are highly nutritious, non-glutinous and not acid forming foods. Hence they are soothing and easy to digest. They are considered to be the least allergenic and most digestible grains available. Compared to rice, especially polished rice, millets release lesser percentage of glucose and over a longer period of time. This lowers the risk of diabetes (More here).
Millets are particularly high in minerals like iron, magnesium, phosphorous and potassium. Finger millet (Ragi) is the richest in calcium content, about 10 times that of rice or wheat. Click here for the nutrient composition of millets as compared to wheat and rice.
Environmental:
Unlike rice and wheat that require many inputs in terms of soil fertility and water, millets grow well in dry regions as rainfed crops. By eating millets, we will be encouraging farmers in dryland areas to grow crops that are best suited for those regions. This is a step towards sustainable cropping practices where by introducing diversity in our diets, we respect the biodiversity in nature rather than forcefully changing cropping patterns to grow wheat and rice everywhere.

What kinds of millets are available?
How do I cook them?
Most millets can be cooked like rice. Millets can replace rice in various dishes such as idli, dosa, payasam/kheer. Millet flour can be used to make rotis. Click here for some recipes.

Where can I buy millets?

CONTACT : UMANATH G
                   COIMBATORE
                   TAMILNADU, INDIA.
                   
                   9364401000
                   
                   

Padhuskitchen: Millet Recipes

click the link.
Padhuskitchen: Millet Recipes: Millets are easy to digest, gluten-free, have higher nutritional value than wheat, especially phosphorus and iron. It is also rich in fiber....

How to cook Millets

Egg less Ragi Chocolate Cake 

Foxtail Millet Khichdi

Multigrain Porridge

Foxtail Millet Paruppu Adai 

Keppai Koozh (salted version)

Ragi Dosa (3 recipes)

Ragi Puttu  (sweet version)

Thinai Dosa (foxtail millet dosa)

Thinai Sakkarai Pongal 

Varagarisi Ven Pongal

Ragi Sweet Porridge (with dates, almonds)

Ragi Vegetable Adai 

Porridge for babies 

Varagu Upma with vegetables

Kambu Dosa (bajra / pearl millet dosa)

Foxtail Millet Payasam (thinai kheer)

Kambu Koozh (bajra porridge)

Thinai Thakkali Sadam (foxtail millet tomato rice- healthy lunch menu idea)

I am adding Cracked wheat (samba godhumai/dalia), brown rice recipe and barley recipes also here.

Samba Godhumai/Cracked Wheat Recipes 

Samba Ravai Upma

Samba Rava Khichdi 

Cracked Wheat Sambar Sadam 

Barley Recipes 

Barley Spinach Khichdi 

Brown Rice Recipes 

Brown Rice Salad 

Brown Rice Upma 

Brown Rice Salad with beans 

Brown Rice Payasam (kheer)

Vegetable Rice with Brown Rice 

Brown Rice Dosa

Ragi Puttu-Finger Millet (Kezhvaragu) Puttu Recipe-Finger Millet Recipes

Finger millet is know as Ragi in Kannada and Hindi, kezhvaragu or keppai in Tamil, ragulu in Telugu and koovaragu in Malayalam. It is a highly nutritious millet. Ragi is an excellent source of calcium (i.e.)about 10 times that of rice or wheat. Consumption of Ragi can reduce the risks of fractures and osteoporosis to a considerable extent. Ragi is also a rich source of fiber and helps lower cholesterol level. Fiber in ragi give you a feeling of fullness which thereby reduces excess appetite and helps to control weight gain. So it is considered one of the best food for weight control. It is  gluten-free food and also cools the body. The iron content in ragi is considered useful for anemic patients. I feel that we should not neglect this tiny millet which has so many health benefits to offer. Ragi puttu is nothing but steamed ragi flour mixed with grated coconut and jaggery/sugar. Today we will learn how to prepare finger millet puttu following this easy recipe.


How to make Ragi Puttu 

Prep time - under 5 mins
Cook time -under 30 mins
Serves -1

Ingredients needed

Finger millet flour/ragi flour - 1/2 cup
Water - 4 tbsp
Salt - a generous pinch
Palm jaggery - 1/4 cup or jaggery or sugar (1/4 cup or as needed)
Ghee -1/2 tsp

For garnishing

Fresh grated coconut

Method 

Take ragi flour in a soft cotton cloth, fold it with the flour inside and steam for 10-12 minutes or until you get a nice aroma of steamed ragi flour.

steaming ragi flour

Look at the steamed flour below. In a plate, spread the steamed ragi flour, add salt and mix well.

Add water, 1 tbsp at a time and mix well or rub the flour well with your fingers. The flour should have a slightly crumbled texture as shown below. Do not add too much water. I added only 4 tbsp of water for 1/2 cup of ragi flour.(See to it that there are no lumps). If required, you can put it in the mixie and blend for just 2 seconds.

steamed ragi flour

Heat water in a steamer or idli cooker/pan and steam the crumbled flour again for 15 minutes. Look at the second picture below, the flour is well cooked.

preparing ragi puttu

Now add grated jaggery (or palm jaggery or sugar), ghee, grated coconut and mix well. Delicious ragi puttu is ready. It is very delicious, nutritious and also very filling. This dish can be had as a breakfast or as a snack. (as we are having it for its health benefits, it is advisable to avoid sugar which is not good for our health). Do try it and give me your feedback.

Go ahead and buy a packet of organic ragi flour (available in all health and organic stores) and enjoys its numerous health benefits. Live a happy and healthy life! This can also be given to children as snacks after they return from school. While giving to kids, start with very less quantity and if it suits her/him increase gradually. 

how to make ragi puttu