MILLETS

MILLETS

Tuesday, 10 June 2014

ஆளிவிதை (Flax Seed)



இதன் பூர்வீகம் மத்தியகிழக்கு நாடுகள் என்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு பரவியது என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஆளிவிதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணை சாயங்களுக்கு மேல்பூசி உலரவைக்கப்படுவதற்கும்,உயர்ரக கடதாசி, லினன் போன்ற துணிவகைகள் உருவாக்குவதற்கும பயன்படுத்தப்பட்டது. 


இந்த ஆளிவிதை பற்றி ஊரில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஆனால் இங்கு FLAX SEED என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடந்த பலவருடங்களாக இதன் தேவை அதிகரித்து விட்டது. அதற்கு காரணம் எமது உணவுப் பழக்கவழக்கமும் அதனால் வரும் நோய்களுமே. சரி இப்போது அதன் பலனையும், பலத்தையும் எப்படி பெறலாம் என்று பார்ப்போம். இது ஏறத்தாழ எள்ளுப்போன்றது ஆனால் எள்ளை விட கொஞ்சம் பெரிதாகஇருக்கும். ஆளிவிதையில் இரண்டு வகை உண்டு ஒன்று மஞ்சள் நிறத்திலும். மற்றயது மண்ணிற நிறத்திலும் காணப்படும். மஞ்சள் ஆளிவிதையை விட மண்ணிறத்தில் உள்ள ஆளிவிதையில் ஒமேகா-3 இன்அளவு கூடுதலாக காணப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊட்டச்சத்தான ஒமேகா-3 (OMEGA-3), என்ற நல்ல கொழுப்பும், அதிகூடிய நார்ச்சத்து, மேலும் வைட்டமின்- A,B, D, கல்சியம்,மக்னீஷியம், புரதம் போன்ற பல சத்துக்கள் கொண்டது. எப்படி ஒரு பெரிய வசன நடைக்கு முற்றுப்புள்ளி வைப்போமோ அதபோல் பல நோய்களுக்கு இத்தநூண்டு சைஸில் இருக்கும் இந்த தானியமும் முற்றுப்புள்ளி வைக்கும். இது நோய் வருமுன், வரும்போது, வந்தபின் காப்போர், என முக்கியமாக எல்லாவயதினர்க்கும் உதவும் அரிய தானியம். மாமிசம் உண்ணாதவர்களுக்கு இந்த ஆளிவிதை மிக உன்னதமான உணவு. அதபோல் மாமிசம் உண்பவர்கள் salman, Tuna, Halibut போன்ற மீன் வகைகளில் இருந்து பெறலாம். ஆனாலும் கூட தினமும் அவற்றை உண்ணுவது என்பது சாத்தியமில்லை. அதனால் தேநீருக்கு சுவை சேர்க்க எப்படி சீனி போடுவீர்களோ அதேபோல் இரண்டு சீனிகரண்டியுடன் (Teaspoon) ஆளிவிதை மாவை உள்ளெடுக்க ஆரம்பிக்கலாம். 




இங்கு எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உடற்பருமன், அடுத்து காலை வேளை அவசர உலகில் அடியெடுத்து வைக்கும்போது ஏற்படும்மலச்சிக்கல், சுவையான கொழுப்பு கூடிய உணவுகள் தரும் கெட்ட கொழுப்புகள், 
(சிலரிற்கு அவர்களது உடலே Bad cholesterol ஐ உருவாக்கும்), 

மார்பகப்புற்று நோய்,PROSTATE CANCER , நீரழிவு நோய், ஞாபகமறதி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், போன்றவற்றிற்கு உகந்தது. 
அன்றாட உணவில் அவரவர் வசதிக்கேற்ப எப்படி இதனை சேர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
FLAX SEED ஐ பல வடிவங்களில் வாங்கலாம், அதாவது (FLAX SEED POWDER, OIL, CAPSULES)ா, எண்ணை, மாத்திரை. தானியமாக உட்கொண்டால் அவை குடலினால்அவ்வளவாக உறிஞ்சப்படாமலே வெளியேறிவிடும். எண்ணை, மாத்திரைகளைவிட மாவாக உணவுடன் சேர்த்து உண்டால், குடலினால் பெருமளவு உறிஞ்சப்படும். 

இதற்கு சுலபமான வழி FLAX SEED ஐ கடையில் வாங்கிGRINDER இல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். FLAX SEED எந்தவிதமான சுவையும் இல்லாதது. ஆகவே தினமும் இரண்டு தேக்கரண்டிஆளிவிதைமாவை தண்ணீரில் கரைத்தோ, அல்லது தயிர் (YOGURT), JUICE,அல்லது காலையில் உண்ணும் சீரியல்களில் போட்டு உண்ணலாம். மேலும் புட்டு, தோசை, இடியப்பம், இட்டலி, இப்படியான எமது உணவுவகைகள்சமைக்கும்போது இதனையும் சேர்த்து சமைக்கலாம். அத்துடன் CAKE, MUFFIN,போன்றவற்றுடன் கலந்து ஓவன் (OVEN) இல் வைத்தும் சமைத்து சாப்பிடலாம். முக்கியமாக ஆளிமாவை உண்ணும்போது கூடவே நன்றாக தண்ணீர் குடிக்கவேண்டும். இது சமிபாட்டின் வேகத்தை கூட்டும். எந்த விடயமாக இருந்தாலும் தினமும் தொடர்ந்து செய்தால்தான் அதன் பலனை முழுமையாகஅனுபவிக்கமுடியும்.

Need flax seed:
Contact: Umanath G 9364401000

No comments:

Post a Comment